முகப்பு
தமிழ்நாடு

நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு வாய்ப்பு

நவம்பர் இறுதி வாரத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு வாய்ப்பு
பகிர்:

நவம்பர் இறுதி வாரத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை. நாட்டில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வந்ததன் காரணமாக பட்ஜெட் மற்றும் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →