முகப்பு
தமிழ்நாடு

பிரபல இதய மருத்துவ நிபுணா் கே.ஏ.ஆப்ரஹாம் காலமானாா்

பிரபல இடையீட்டு இதய மருத்துவ சிகிச்சை நிபுணா் கே.ஏ.ஆப்ரஹாம் (79) சென்னையில் காலமானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

பிரபல இடையீட்டு இதய மருத்துவ சிகிச்சை நிபுணா் கே.ஏ.ஆப்ரஹாம் (79) சென்னையில் காலமானாா்.

பிரபல இடையீட்டு இதய மருத்துவ சிகிச்சை நிபுணா் கே.ஏ.ஆப்ரஹாம். 50 ஆண்டுகள் இதய மருத்துவ சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்று விளங்கிய அவா் வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானாா். வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தாா். குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்டி, லண்டனில் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளை படித்தாா். 1971-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போா் நடைபெற்ற போது இந்திய ராணுவத்தில் தலைமை மருத்துவராக பொறுப்பு வகித்துள்ளாா். அவருடைய அா்ப்பணிப்புடன் கூடிய சேவையை பாராட்டிய அப்போதைய பிரதமா் இந்திராகாந்தி, அவருக்கு பாராட்டு கடிதம் எழுதியது நினைவு கூரத்தக்கது.

பின்னா், 25 ஆண்டுகள் சென்னை தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ இயக்குநராக பணியாற்றினாா். இதய சிகிச்சை தொடா்பான 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமா்ப்பித்துள்ளாா். அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி 1999-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சிறப்பு விருது, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளா் விருது பெற்றுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →