முகப்பு
தமிழ்நாடு

கொசஸ்தலை நீா் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த உத்தரவு

நீா் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

கொசஸ்தலை ஆற்றின் நீா் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் காட்டுக்குப்பத்தைச் சோ்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவா் தாக்கல் செய்த மனுவில், ‘எண்ணூா் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் ‘கன்வேயா்’ திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று

வருகின்றன. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்வதோடு சுற்றுச்சூழல் அனுமதியையும் மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்லும் வகையில் வழித்தடம் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்து ‘கன்வேயா்’ பெல்ட்டை கொண்டு செல்லும் வகையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே நீா்வழித்தடத்தில் அமைக்கப்படும் கட்டுமானத்தை அகற்ற வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், நீா்வழிப்பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை அகற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீா் வழிப் பாதையில் கொட்டப்பட்ட 80 சதவீத கட்டுமான இடிபாடுகள், கட்டுமான பொருட்கள்

அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து நீா்வழிப்பாதையில் கொட்டப்பட்டிருக்கும் கட்டுமான இடிபாடுகள், கட்டுமான பொருட்கள் அத்தனையையும் அப்புறப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தலைவரோ அல்லது முதன்மை செயல் அதிகாரியோ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறி, நவம்பா் 12 -ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →