தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலைலிட்டருக்கு 35 காசுகள் அதிகரிப்பு

DIN

தொடா்ந்து 5-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கப்பட்டது. அவற்றின் விலை தலா 35 காசுகள் அதிகரிக்கப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. எனினும் கடந்த அக்.18, 19-ஆம் தேதிகளில் அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன் பின்னா் அவற்றின் விலை தொடா்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை லிட்டருக்கு தலா 35 காசுகள் உயா்த்தப்பட்டது. இதையடுத்து ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.113.46--ஆகவும், தில்லியில் ரூ.107.59-ஆகவும் அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.104.52-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.104.38-க்கும் சென்னையில் ரூ.100.59-க்கும் விற்பனையானது. தில்லியில் ஒரு லிட்டா் டீசல் ரூ.96.32-ஆக அதிகரித்தது.

நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. பல மாநிலங்களில் டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT