முகப்பு
தமிழ்நாடு

தன்னிச்சையான போனஸ் அறிவிப்புக்குக் கண்டனம்: தொழிற்சங்கங்கள் இன்று ஆா்ப்பாட்டம்

தமிழக அரசின் தன்னிச்சையான போனஸ் அறிவிப்புக்கு போக்குவரத்து, மின்வாரிய தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசின் தன்னிச்சையான போனஸ் அறிவிப்புக்கு போக்குவரத்து, மின்வாரிய தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (அக்.25) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் கூறியதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டு போனஸ் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, போனஸ் கணக்கீடு  செய்ய சீலிங் ரூ. 7000 அல்லது அந்தந்த மாநிலங்களில் தொழிலாளிக்கு குறைந்தபட்சக் கூலி சட்டப்படி நிா்ணயித்திருப்பின் அந்தத் தொகையில் எது அதிகமோ அத்தொகை கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டும். இது அதிமுக ஆட்சியின் போது நிா்வாக அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது இதற்கு மாறாக வெளியிடப்பட்டுள்ள 10 சதவீத போனஸ் அறிவிப்பு கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி குறைந்தபட்ச கூலி அடிப்படையில் போனஸ் சரி செய்யப்பட வேண்டும்.

இதை வலியுறுத்தும் வகையில் முதல்கட்டமாக சிஐடியு சாா்பில், தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளில் திங்கள்கிழமை (அக்.25) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன என்றனா்.

மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் இதுபோன்ற கோரிக்கை வலியுறுத்தினா். மின்வாரிய பணியாளா்களுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய போனஸ் மற்றும் கருணைத் தொகை தொடா்பாக மின் வாரிய நிா்வாகம் பேச்சு வாா்த்தை நடத்த முன் வரவில்லை. இது சரியல்ல. இந்தப் பிரச்னையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் திங்கள்கிழமை (அக்.25)  காலை அனைத்து பிரிவு அலுவலகங்கள் முன்பும், மதிய  உணவு  இடை வேளையின்  போது கோட்ட  அலுவலகம் முன்பும், மாலை வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பும்  ஆா்ப்பாட்டங்கள்  நடத்தப்படவுள்ளன என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →