தமிழ்நாடு

நாளை வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் இயங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

நாளை வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் இயங்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை இராணிமேரி கல்லூரி அருகில் சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மிதிவண்டி பிரச்சாரப் பயணத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உலக போலியோ தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

போலியோ என்கிற கொடிய நோயை ஒழித்த பெருமை ரோட்டரி அமைப்பினரைச் சாரும். போலியோ ஒழிப்பு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனாஷ் சால்கின் பிறந்தநாள் இன்று. போலியோ குறித்த விழிப்புணர்வு மீண்டும் மீண்டும் ஏற்படுத்துவதற்காக சென்னையில் இன்று ரோட்டரி அமைப்பினரின் சார்பில் மிதிவண்டி பிரச்சார பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் கரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்வர் திட்டமிட்டபடி, மிகச் சிறப்பாக தமிழகத்தில் 23 லட்சத்து 27 ஆயிரத்து 907 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 2வது தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 68 ஆயிரத்து 457. முதல் தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 59 ஆயிரத்து 450.

கூடுதலான வகையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 69 சதவிகிதம் பேர். இரண்டாவது தவணை தடுப்பூசியை 29 சதவிகிதம் பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை சதவிகித அடிப்படையில் எண்ணிக்கை குறைவு என்றாலும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டுவோம்.

இன்று தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் இயங்கும். தடுப்பூசிகள் தற்போது கையிருப்பாக 43 லட்சம் அளவுக்கு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ரோட்டரி அமைப்பின் நிர்வாகிகள் ராஜசேகரன், அருனிஷ் ஊபரோய், கார்த்திக் சுரேந்தரன் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT