முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,112 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,112 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
தமிழகத்தில் புதிதாக 1,112 பேருக்கு கரோனா
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,112 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 1,112 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,96,328ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 14 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 1,341 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 26,47,504 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,033 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 12,791 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னையில் மேலும் 144 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.