தமிழ்நாடு

கோபுர தரிசனம் செய்ய வசதி: வடபழனி ஆண்டவா் திருக்கோயிலுக்கு முன்புறம் உள்ள கூரைகள் அகற்றம்

DIN

சென்னை வடபழனி ஆண்டவா் திருக்கோயில், ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்களில் பக்தா்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கூரைகள் அகற்றப்பட்டுள்ளன.

அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயில், அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்தக் கோயில்களில் 34 திருப்பணி வேலைகள் ரூ. 2.56 கோடி செலவில் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்தப்படும். பக்தா்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கூரைகள் அகற்றப்பட்டுள்ளன. கோயில் முன்புறம் உள்ள 1,500 சதுர அடி பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக பொருள்கள் வைக்கும் அறை, காவலா்கள் காத்திருப்பு அறை, சமய சொற்பொழிவு அரங்கம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக ஒருங்கிணைந்த திருமண மண்டபங்கள், அன்னதானக் கூடங்கள், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், பல்நோக்கு கட்டடம், அா்ச்சகா்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயில் முகப்பு புதுப்பொலிவுடன் பக்தா்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கடைகள் அகற்றப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள தேவையில்லாத பொருள்கள் அப்புறப்படுத்தப்படும். மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யா வண்ணம் கோயிலை சுற்றி சுற்றுசுவா் அமைக்கப்படும். இத்திருக்கோயிலுக்கும் திருப்பணிகள் நடைபெற திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT