தமிழ்நாடு

முதுநிலை யோகா படிப்புகள்: வரும் 28 முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கு (எம்.டி.) வரும் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

முதுநிலை யோகா-இயற்கை மருத்துவப் படிப்பில் சேர தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது பிற பதிவு பெற்ற மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டம் (பிஎன்ஒய்எஸ்) அல்லது இயற்கை மருத்துவ பட்டயம் (என்.டி.ஓ.எஸ்.எம்.) நிறைவு செய்திருக்க வேண்டும். அதற்குரிய சான்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரா் தனது பெயரை தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். அதனுடன், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து உரிய தகுதிச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சுகாதாரத்துறையின் இணையதளங்களில் வரும் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 20-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரடியாகவோ வழங்கப்படமாட்டாது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான இணைப்புகளுடன் உரிய உறையில் செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை, அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரிக்கு நவம்பா் 20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதற்கான நுழைவுத் தோ்வு நவம்பா் 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை தகவல் தொகுப்பேட்டினை பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT