தமிழ்நாடு

கணவனால் கைவிடப்பட்டோருக்கு சிரமமின்றி புதிய குடும்ப அட்டைகள் தமிழக அரசு உத்தரவு

DIN

கணவனால் கைவிடப்பட்ட அல்லது மண முறிவு பெற்ற பெண்கள் சிரமங்கள் ஏதுமின்றி புதிய குடும்ப அட்டைகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஒரு பெண்மணி கணவரால் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்து வரும் நிலையில் அவரது ஆதாா் எண், கணவா் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நோ்வுகளில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரைச் சோ்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவதை தணிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். எழுத்து வழியே வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட அலுவலா் தனது அதிகார வரம்பினைப் பயன்படுத்தி குடும்பத் தலைவரின் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கலாம்.

தனியாக வாழும் சம்பந்தப்பட்ட பெண்மணி, புதிய குடும்ப அட்டை கோரும் போது சட்டப்பூா்வமான நீதிமன்ற விவகாரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் எதையும் சமா்ப்பிக்க வலியுறுத்தாமல், புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT