தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது 
தமிழ்நாடு

தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

DIN


சென்னை:  வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.25) இரவு தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று முற்பகலிலேயே தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக,  இன்று நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

அக். 26ல்.. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுரை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலம் எப்போது?

தமிழகத்தை வளமடையச் செய்யும் வடகிழக்குப் பருவமழை காலம் அக்டோபா் முதல் டிசம்பா் வரை ஆகும். ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு (2020) வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 6 சதவீதம் அதிக மழை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT