பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 
தமிழ்நாடு

பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

மதமோதலை உண்டாக்கும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரின் அடிப்படையில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

மதமோதலை உண்டாக்கும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரின் அடிப்படையில் பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பாஜக பிரமுகராக அறியப்பட்டு வரும் கல்யாணராமன் சமூக வலைத்தளப் பக்கத்தில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் கல்யாண ராமன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் மதமோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர்மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT