தமிழ்நாடு

தமிழகத்தில் அக்.30-ல் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி ஏழாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்றை பரவாமல் தடுக்க கரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 6 வாரமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், அசைவம் எடுத்துக் கொண்டால் தடுப்பூசி செலுத்தக்கூடாது என்ற வதந்தியை மக்கள் நம்புவதால், அசைவம், மது பிரியர்களுக்காக கடந்த வாரம் முதல் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அடுத்தக்கட்ட தடுப்பூசி முகாம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,

“ஏழாம் கட்ட தடுப்பூசி முகாமானது அக்டோபர் 30 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படும். மேலும், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள்தான் இரண்டாம் கட்ட கோவேக்ஸின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT