தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை: எங்கெல்லாம் வாய்ப்பு?
தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல நாளை(அக்.30) நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.