தமிழ்நாடு

வேலூா் உள்பட 7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

வேலூா், ராணிப்பேட்டை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (நவ. 1) பலத்தமழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாள்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.31) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.1: வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூா் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.1-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,தென்கிழக்கு அரபிக்கடலை ஒட்டிய தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு நவ.3-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT