முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,021 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,021 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
தமிழகத்தில் புதிதாக 1,021 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,021 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்புகள் குறித்த தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் 1,24,055 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக 1,021 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,01,614 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,172 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 26,53,832 பேர் குணமடைந்துள்ளனர். 36,097 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 11,685 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 120 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை - 116
செங்கல்பட்டு  - 85

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.