கடலூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கடலூரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்தாண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டன. கரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதை முன்னிட்டு நிகழ் கல்வியாண்டில் செப்.1 ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, நவ.1 ஆம் தேதி முதல் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளையும் துவங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது சுமார் 19 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. எனவே, கடந்த சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், திங்கள்கிழமையும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
19 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.