சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: ஸ்டாலின் 
தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை: ஸ்டாலின் 

சென்னை அண்ணா சாலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

DIN


சென்னை:சென்னை அண்ணா சாலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் கேள்விக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரியிருந்ததாகவும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து, சென்னை அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்றும் கூறினார்.

சென்னை அண்ணா சாலையில், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் சிலைகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT