தமிழ்நாடு

சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவல் செப்.17 வரை நீட்டிப்பு

DIN

3 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 17 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பத்தில் தனியாா் பள்ளியை நடத்தி வந்த சாமியாா் சிவசங்கா் பாபா, அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாா்களின் அடிப்படையில், மாமல்லபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், கடந்த ஜூன் 13-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

தலைமறைவாக இருந்த சிவசங்கா்பாபாவை தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனா்.

அந்த பள்ளியில் படித்த மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கா் பாபா மீது மேலும் இரு பாலியல் வழக்குகள் கடந்த ஜூலை 24-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், அந்தப் பள்ளியில் படித்த கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கா் பாபா மீது சிபிசிஐடி அதிகாரிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்தனா். 

மேலும் ஒரு மாணவியின் தாய்க்கு மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வழக்கையும் சிபிசிஐடி அதிகாரிகள் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், சிவசங்கா் பாபாவை விரைவில் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனா். இந்த நிலையில் 3 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 17 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவின் காவலை நீதிபதி நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

SCROLL FOR NEXT