காரைக்குடியில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினர். 
தமிழ்நாடு

காரைக்குடியில் ரயில் மறியல்: ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் உள்பட 13 பேர் கைது 

காரைக்குடி ரயில் நிலையத்தில் பழைய ரயில் நிலைய அலுவலகம் வருவதற்கான பாதையை திறக்க வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். 

DIN

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் பழைய ரயில் நிலைய அலுவலகம் வருவதற்கான பாதையை திறக்க வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையத்தில் 3 ஆவது நடைமேடை பகுதிக்கு பயணிகள் செல்வதற்கு பாதை இல்லை. பயணிகள் பயன்படுத்தி வந்த பழைய ரயில் நிலைய அலுவலகம் வருவதற்கான பாதையையும் ரயில்வே நிர்வாகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடிவிட்டது.

இப்பாதையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ சங்கம் முன்னர் ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தது. இதையடுத்து காரைக்குடி வட்டாச்சியர், டிஎஸ்பி ஆகியோர்  முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியதால்  ரயில் மறியல் கைவிடப்பட்டது.

அப்போது பேச்சுவார்த்தையின் போது ரயில்நிலைய அதிகாரி ஒப்புதலின் பேரில் அவ்வழியில் அடைக்கப்பட்ட கதவு ஒரு வாரத்தில் திறப்பதாக ஒப்புதல் கொடுத்தனர். ஆனால் இரண்டு மாதமாகியும் திறக்கவில்லை.

அதனால் வெள்ளிக்கிழமை (செப்.3) காலை திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரயில்  காரைக்குடி ரயில் நிலையம் காலை 8.30 மணிக்கு வந்தபோது ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஏஐடியூசி தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் பிஎல்.  ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  நகர ஒருங்கிணைப்பாளர் ஏஜி. ராஜா முன்னிலை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் கண்ணன்,செயலாளர் ராமராஜ், தலைவர் முருகன், ஆட்டோ சங்க தலைவர் கணேசன் தமிழ்நாடுபோக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் காஜா முகைதீன், கட்டட சங்க நகரச் செயலாளர் வேலாயுதம் துணைத் தலைவர் ஜான் கமிட்டி உறுப்பினர்கள் லட்சுமணன் ஆதி உள்பட 13 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

SCROLL FOR NEXT