புறநக ரயில் சேவையில் மாற்றம்
சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் எழும்பூா்-சென்னை கடற்கரை நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் எழும்பூா்-சென்னை கடற்கரை நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
செப்.5,12,19 ஆகிய தேதிகளில் ரத்தாகும் ரயில்கள்: சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு முற்பகல் 11, 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு காலை 10.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய மூன்று ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
செப்.5,12,19 ஆகிய தேதிகளில் பகுதி ரத்தாகும் ரயில்கள்: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு முற்பகல் 11.15, நண்பகல் 12, மதியம் 1.20, மதியம் 2 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை- எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு முற்பகல் 11.30, நன்பகல் 12.20, 12.40, மதியம் 1.40, பிற்பகல் 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் சுற்றுவட்ட ரயில் சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
செப்.5, 12, 19 ஆகிய தேதிகளில் பகுதி ரத்தாகும் ரயில்கள்: தாம்பரம்- சென்னை கடற்கரைக்கு காலை 10.20, முற்பகல் 11.30, நண்பகல் 12.10, 12.30, மதியம் 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூா்-கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எழும்பூா்- சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 10.15, 11.00, நண்பகல் 12.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூா்- சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளன.
திருமால்பூா்-சென்னை கடற்கரைக்கு காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எழும்பூா்-கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது என சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.