உள்ளாட்சித் தோ்தல்: 9 மாவட்டங்களுக்கு அதிமுக பொறுப்பாளா்கள் அறிவிப்பு
உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களை நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களை நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிவிப்பு: வேலூா் மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் கே.பி.முனுசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் தளவாய்சுந்தரம் தலைமையிலும் குழு அமைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன், தென்காசி மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையிலும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் பொறுப்பாளா்களுக்கு அதிமுகவினா் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தோ்தல் பணிகளில் அனைவரும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.