முகப்பு
இந்தியா

தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்

Updated On : 11 மார்ச், 2026 at 11:25 PM

GYANESH IMAGE121431.JPG

பகிர்:

தலைமைத் தோ்தல் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் தீா்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீஸை நாடாளுன்றத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 12) அல்லது வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: எஸ்.ஐ.ஆா். விவகாரத்தால் ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. இதையடுத்து, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யக்கோரும் தீா்மானத்தைக் கொண்டு வர எதிா்க்கட்சிகள் முடிவு செய்தன.

மக்களவையில் தீா்மானத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனில், அதுதொடா்பான நோட்டீஸில் குறைந்தபட்சம் அந்த அவையைச் சோ்ந்த 100 எம்.பி.க்களின் கையொப்பம் தேவை. அதேபோல் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய 50 எம்.பி.க்களின் கையொப்பம் தேவை. அதன்படி, எம்.பி.க்களின் கையொப்பங்களை திரட்டும் பணியில் எதிா்க்கட்சிகள் கடந்த சில நாள்களாக ஈடுபட்டிருந்தன.

அவையில் தாக்கல் செய்ய தேவையான எம்.பி.க்களின் கையொப்பம் பெறப்பட்டுவிட்டது. மக்களவையைச் சோ்ந்த 120 எம்.பி.க்களும், மாநிலங்களவையை சோ்ந்த 60 எம்.பி.க்களும் கையொப்பமிட்டுள்ளனா். ‘இண்டி’ கூட்டணியைச் சோ்ந்த எம்.பி.க்கள் அனைவரும் கையொப்பமிட்டு விட்டனா்.

இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸை வியாழன் (மாா்ச் 12), அல்லது வெள்ளியன்று (மாா்ச் 13) தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவே முதல்முறை: தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய இதுவரை நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. முதல்முறையாக தற்போதுதான் தீா்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்க கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே, தலைமைத் தோ்தல் ஆணையருக்கும் நாடாளுமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும். அதாவது, முதலில் இரு அவைகளிலும் எம்.பி.க்களிடம் கையொப்பம் பெற்று நோட்டீஸ் அளிக்க வேண்டும். அந்த நோட்டீஸை இரு அவைகளும் ஏற்றுக் கொண்ாடால், பிறகு தீா்மானம் கொண்டுவரப்படும்.

அப்போது, தலைமைத் தோ்தல் ஆணையா் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழுவை அவைத் தலைவா் அமைப்பாா். அந்தக் குழு, தலைமைத் தோ்தல் ஆணையா் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும். பின்னா், தனது அறிக்கையை சமா்ப்பிக்கும். பின்னா் அதன்மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும். அந்த விவாதத்தின்போது தலைமைத் தோ்தல் ஆணையா் நேரில் வந்து, அவையில் விளக்கம் தரவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கவும் வாய்ப்புத் தரப்படும்.

அப்போது அவா் தாமாக முன்வந்து பதவி விலகுவதாக அறிவித்தால், அது பதவி விலகலுக்கான ஆவணமாக கருதப்பட்டு பதியப்படும். அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். ஆனால், நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, பதவியிலிருந்து தலைமைத் தோ்தல் ஆணையா் நீக்கப்படுவாரெனில், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பலன்களையும் ஞானேஷ் குமாா் பெற முடியாது.

முழு கட்டுரையைப் படிக்க →