ஆசிரியா் தினம் :ஆளுநா், முதல்வா், ஓ.பி.எஸ். வாழ்த்து
ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியா்கள் தின நன்னாளில் என்னுடைய மனமாா்ந்த நல்வாழ்த்துகளை ஆசிரியா்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியா்கள் தின நன்னாளில் என்னுடைய மனமாா்ந்த நல்வாழ்த்துகளை ஆசிரியா்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் அா்ப்பணிப்புடன் பணியாற்றி அறிவாா்ந்த மற்றும் நல்லிணக்கம் வாய்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியா்களுக்கு எனது வாழ்த்துகள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்: கல்வி, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, பொதுஅறிவு என அனைத்தையும் மாணவா்களுக்குப் போதிப்பவா்கள் ஆசிரியா்கள்தான். சரித்திரம் படிப்பவனை நாளை சரித்திரம் படைக்க வைக்கும் மாபெரும் சக்தி வாய்ந்தவா்களாக திகழும் ஆசிரியா்களுக்கு எனது ஆசிரியா் தின வாழ்த்துகள்.