தமிழ்நாடு

தாம்பரம் அருகே கோர விபத்து: வேலை தேடி வந்த 5 இளைஞர்கள் பலி

தாம்பரம் பெருங்களத்தூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் இருந்து 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

DIN


சென்னை: தாம்பரம் பெருங்களத்தூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையோரம் இரும்பு பாரம் ஏற்றி நின்றிருந்த லாரி மீது நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து வந்த போலீஸார், அப்பளம் போல் நொறுங்கிய காரை துண்டித்து காரில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், காரில் வந்தவர்களில் புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல் கார்த்திக்கேயன், மேட்டூரை சேர்ந்த ராஜஹரிஷ், சென்னை கே.கே.நகரை சேர்ந்த அரவிந்த் சங்கர், திருச்சியை சேர்ந்த அஜய், காரை ஓட்டி வந்த மேட்டூரை சேர்ந்த நவீன் என்பதும், வேலை தேடி வந்தவர்கள் என்றும், அவர்கள் திங்கள்கிழமை நேர்முகத் தேர்வுக்கு செல்லவிருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT