முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி சேலம் பிரதான சாலையில் விபத்து: இளைஞர் பலி

எடப்பாடி சேலம் பிரதான சாலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார், உடன் வந்த அவரது நண்பர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வேன்
பகிர்:


எடப்பாடி: எடப்பாடி சேலம் பிரதான சாலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார், உடன் வந்த அவரது நண்பர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

எடப்பாடி அடுத்த குரும்பபட்டி கிராமம், மொட்டையன் தெருவைச் சேர்ந்த குமார் மகன் வீரப்பன்(18), இவரது நண்பர் ஸ்ரீதர்(20), இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை எடப்பாடியில் இருந்து கொங்கணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

வாகனத்தை வீரப்பன் ஓடியதாக கூறப்படுகிறது. இவர்கள் சென்ற வாகனம் எடப்பாடி சேலம் பிரதான சாலையில் உள்ள, குரும்பப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த ஸ்ரீதர் பலத்த காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த குறித்து வழக்குப் பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார், வீரப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →