தமிழ்நாடு

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவ காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தலா 5, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், புதுக்கோட்டை ஆலங்குடி தலா 4 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

மறுவெளியீட்டில் வசூல் சாதனை.. கில்லியைப் பின்னுக்குத் தள்ளிய பாகுபலி: தி எபிக்!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கவர்ச்சியும் நடனமும்... பெத்தி படத்தின் முதல் பாடல்!

பள்ளித் திடலுக்குள் நுழைந்த கார்! பயந்து ஓடிய மாணவர்கள்! | Kerala

SCROLL FOR NEXT