தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1.71 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,670 கன அடியிலிருந்து 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கன அடியாக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு  பரவலாக மழை பெய்து வருகிறது.  கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,670 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் சனிக்கிழமை காலை 69.39 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 71.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.71அடி உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.65 டி.எம்.சியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT