முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாள்களுக்குப் பிறகு பாதிப்பு குறைவு: புதிதாக 1,556 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,556 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் பலியாகினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
தமிழகத்தில் 4 நாள்களுக்குப் பிறகு பாதிப்பு குறைவு: புதிதாக 1,556 பேருக்கு கரோனா
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,556 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 18 பேர் பலியாகினர்.

கடந்த 4 நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று (செப்.6) சற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை (செப்.6) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,556 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,24,234-ஆக உயர்ந்துள்ளது.

இன்று பலி எண்ணிக்கை 18-ஆக குறைந்துள்ளது. எனினும் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,036-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,72,942-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும்  1,55,088 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →