முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 
தமிழ்நாடு

தமிழகத்தில் 2022 ஜன. முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்: முதல்வர்

தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் விதி 110இன் கீழ் முதல்வர் பேசியது:

“தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.”

கரோனா பேரிடரால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது ஏப்ரல் 2020 முதல் உயர்த்தப்படாமல் இருந்தது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17லிருந்து 28 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கில்லாத கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி: துரை வைகோ

எழும்பூா் ரயில் நிலையம் புனரமைப்புப் பணி: சென்னை ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

நாளை சந்திர கிரகணம்: அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் பாா்வையிட சிறப்பு ஏற்பாடு

மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் மீது ‘போக்ஸோ’ வழக்கு

SCROLL FOR NEXT