மு.க.ஸ்டாலின்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கான பயனுள்ள அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

DIN

தமிழக சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:

  • தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது 2022 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.
  • சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படும்.
  • அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • அரசு ஊழியர்கள் பயன்பெறும் விதமாக தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்.
  • புதிதாக பணியில் சேரும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படும்.
  • கடந்த 2017 முதல் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிக பணிநீக்கம் ஆகிய நாள்களை வேலை நாள்களாக மாற்றம்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து. பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் முந்தைய இடங்களுக்கே மாற்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT