நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் 
தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள்: வெள்ளை அறிக்கை இன்று தாக்கல்?

அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

அதிமுக ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலைமை என விரிவான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்று சட்டப்பேரவையில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும் அதிமுக ஆடசியில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை துன்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் குறித்த மசோதாவும் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT