முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரையில் குழந்தை தெரசாள் ஆலயத்தில் தேவமாதா பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் தேவமாதா பிறந்தநாள் விழா நேற்று(புதன்கிழமை) இரவு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
மானாமதுரையில் நடைபெற்ற தேவமாதா பிறந்தநாள் விழாவில் குழந்தை தெரசாள் சொரூபம் சிறிய பல்லக்கில் அலங்கரித்து வைத்து பிரார்த்தனை நடத்தப்பட்டது.
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் தேவமாதா பிறந்தநாள் விழா நேற்று(புதன்கிழமை) இரவு நடைபெற்றது.

இதையொட்டி ஆலயத்தின் வெளி வளாகத்தில் புனித குழந்தை தெரசாள் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவமாதா பிறப்பு குறித்து பங்குத்தந்தை விளக்க உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் ஆலயத்தின் பங்கு இறைமக்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.