தமிழகத்தில் 3வது நாளாக கரோனா அதிகரிப்பு 
தமிழ்நாடு

தமிழகத்தில் 3வது நாளாக கரோனா அதிகரிப்பு: புதிதாக 1,631 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் பலியாகினர்.

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் பலியாகினர்.

தமிழகத்தில் நேற்று 1,596 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,631 பேராக உயர்ந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை (செப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,631 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,30,592-ஆக உயர்ந்துள்ளது.

இன்று பலி எண்ணிக்கை 25-ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,119-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,523 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,79,169-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக சென்னையில் 174, கோவையில் 235 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 1,57,689 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

SCROLL FOR NEXT