தமிழ்நாடு

‘காவலர்களுக்கு கூடுதலாக 10% ஊதியம் தர பரிசீலிக்க வேண்டும்’: உயர்நீதிமன்றம்

DIN

காவலர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஊதியம் வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியது:

காவல்துறையினர் 24 மணிநேரமும் விடுமுறையின்றி பணிபுரிவதால் சில நேரங்களில் கோபமடைகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் காவல்துறையினர் மன உளைச்சலுடன் பணிபுரிகின்றனர். காவலர்களுக்கு 8 மணிநேர பணிநேரம் வீதம் 3 ஷிப்ட் முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மேலும், அவர்களுக்கு கூடுதலாக குறைந்தது 10 சதவீதம் ஊதியம் வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். காவல்துறையினரின் மகத்தான பணியை வேறு எந்த பணியுடனும் ஒப்பிட முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே சிறந்த காவலர்களை எதிர்பார்க்க முடியும்.

காவலர்கள் ஆணையம்..

காவலர்கள் ஆணையத்தை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 மாதத்தில் அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தில் மனநல மருத்துவர், உளவியலாளர், சமூக ஆர்வலர், காவல்துறையினர், வழக்கறிஞர் இடம்பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT