தமிழ்நாடு

குண்டா் சட்டத்தில் 261 போ் கைது

DIN

சென்னையில் நிகழாண்டில் இதுவரை 261 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடா் குற்றச் செயல்கள் மற்றும் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவா்களை தீவிரமாக கண்காணித்து குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜன.1 முதல் செப்.10-ஆம் தேதி வரையில் காவல் ஆணையா் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் மொத்தம் 261 குற்றவாளிகள் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 4-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (செப்.10) வரையிலான ஒரு வாரத்தில் 4 குற்றவாளிகள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபா்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிா்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்கள் பதுக்கி வைத்து விற்பவா்களைத் தொடா்ந்து கண்காணித்து, அவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT