முகப்பு
தமிழ்நாடு

'ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள்' - கமல்ஹாசன்

ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என  நீட் தேர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என  நீட் தேர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 2021-ஆம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தோ்வான நீட் தோ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் இருந்து நீட் தோ்வை எழுத, 1,10,971 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், 40,376 மாணவா்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனா். மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளாா்.

இந்நிலையில் நீட் தேர்வு குறித்து கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?! என்று பதிவிட்டுள்ளார். 

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →