கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன். 
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் 125 தடுப்பூசி மையங்களில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி பணி தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர் இலக்கு நிர்ணயித்து

DIN

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர் இலக்கு நிர்ணயித்து உள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 125 தடுப்பூசி மையங்கள், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கும்மிடிப்பூண்டியில் 125 மையகளில் கரோனா தடுப்பூசி போடப்படுவதை முன்னிட்டு சனிக்கிழமை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவ, நடராஜன், வட்டாட்சியர் மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்களோடு ஆலோசனை நடத்தினர். 

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் யமுனா தலைமையில் ஒலிபெருக்கி பிரசாரம் மூலமூம், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் தந்தும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி பஜார், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை, தேர்வழி ஊராட்சி கோட்டக்கரையில் கரோனா தடுப்பூசி முகாமை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், வட்டாட்சியர் ந.மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜரானஷ்வரி, தேர்வழி ஊராட்சி தலைவர் கிரிஜா குமார், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அனிதாசுந்தரி முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் 25 ஆவது முறையாக கரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன் தலைமையிலும், துணை தலைவர் எம்.எல்லப்பன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை மாவட்ட தடுப்பூசி பணி உதவி மேலாளர் டாக்டர் மோகன சுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரமூர்த்தி நேரில் ஆய்வு செய்தனர்.

அவ்வாறே தமிழகத்தின் முதல் ஊராட்சியான கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எகுமதுரை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் எம்.ஸ்ரீபிரியா மகேந்திரன் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் சோபன்பாபு முன்னிலையிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மேலும் கும்மிடிப்பூண்டியில் ஆரம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தனசேகர் தலைமையிலும், கண்ணம்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சதீஷ் தலைமையிலும், பல்லவாடாவில் ஊராட்சி தலைவர் லட்சுமி பன்னீர்செல்வம் தலைமையிலும், மாநெல்லூரில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் தலைமையிலும், பாதிரிவேட்டில் ஊராட்சி தலைவர் மூர்த்தி தலைமையிலும், மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையிலும், கண்ணன்கோட்டையில் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி தலைமையிலும், கீழ்முதலம்பேட்டில் ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் தலைமையிலும், குருவாட்டுச்சேரியில் ஊராட்சி தலைவர் கோமதி சேகர் தலைமையிலும், எஸ்.ஆர்.கண்டிகையில் ஊராட்சி தலைவர் ரேணுகா முரளி தலைமையிலும், சிறுபுழல்பேட்டையில் ஊராட்சி தலைவர் சுசிலா மூர்த்தி தலைமையிலும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் 125 கரோனா தடுப்பூசி முகாம்களை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT