தமிழ்நாடு

'நெடுஞ்சாலைகளில் இனி 100 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடாது'

DIN

தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கு குறைவாகவே இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
2018-ம் ஆண்டு எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

2013-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பல் மருத்துவர் விபத்தில் படுகாயமடைந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், 

உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு கட்டாயம் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், இறக்குமதி வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி அவசியம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT