தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

DIN

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கடந்த செப்.1-ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. சில மாவட்டங்களில் ஆசிரியா்கள், மாணவா்களில் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏதுமின்றி புத்தாக்கப் பயிற்சிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகளை நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனையில், அதிகாரிகள் கூறும் கருத்துகள் அடிப்படையில் முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT