தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் கரோனா: மண்டலவாரியாக விவரம்

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,790 ஆக அதிகரித்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை மாலை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகத்தில் புதிதாக 1,591 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் 212 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில்  இதுவரை மொத்தமாக 5,46,646 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது சென்னையில் 1,790 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு 8,435 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,36,421 பேர் குணமடைந்துள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,752 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT