சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவி விக்னேஷ்வரி மற்றும் அவரது தாயார் 
தமிழ்நாடு

சர்வதேச போட்டிக்கு ஏழை மாணவி தேர்வு: நேபாளம் செல்ல பணம் இல்லாமல் தவிப்பு

சர்வதேச கைப்பந்து போட்டிக்கு  தேர்வாகி  நேபாளம் செல்ல பணமில்லாமல் தவிக்கும் விளையாட்டு வீராங்கனை விக்னேஸ்வரி.

எம். ஞானவேல்


சீர்காழி: சர்வதேச கைப்பந்து போட்டிக்கு  தேர்வாகி  நேபாளம் செல்ல பணமில்லாமல் தவிக்கும் விளையாட்டு வீராங்கனை விக்னேஸ்வரி. அர்ச்சனை கடை வைத்து குடும்பத்தை நடத்தும் தாயால் பணம் செலுத்த முடியாததால், பொதுமக்களின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. வைத்தீஸ்வரன் கோயில் கீழ வீதியில் அர்ச்சனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கணவர் செல்வராஜ் 17 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் விக்னேஸ்வரி ( 22 ) என்ற இளைய மகள்  உடற்கல்வி ஆசிரியருக்கான இளங்கலைப் படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் விக்னேஸ்வரி வைத்தீஸ்வரன்கோயில் அரசு பள்ளி மற்றும் அதைத்தொடர்ந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி படிப்பை படித்தபோதே மாநில அளவிலான கைப்பந்து போட்டி மற்றும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். ஏழ்மையான இந்த மாணவி அவர் தன் தாயின் அர்ச்சனைக்கடை வருமானத்தை வைத்துதான் படிப்பையும் விளையாட்டையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில்  தமிழ்நாட்டில் இருந்து சென்ற 12 அணியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மாணவி விக்னேஸ்வரி உள்ளிட்ட 4 பேர் பங்கேற்றனர்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் மாணவி விக்னேஸ்வரி தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து ஊர் திரும்பினார்.

இந்நிலையில் வரும் 26-ம் தேதி சர்வதேச அளவிலான கைப்பந்து போட்டி நேபாளத்தில் நடைபெறுகிறது. இதில் மாணவி விக்னேஷ்வரி கடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் மீண்டும் தேர்வாகியுள்ளார். அரசு அங்கீகரித்து தனியார் அமைப்பு மூலம் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்க நேபாளம் செல்ல வேண்டுமென்றால் மாணவி விக்னேஸ்வரி ரூ. 40 ஆயிரம் வரை பணம் செலவாகும் எழ்மையான தனது குடும்ப நிலையை எண்ணி சர்வதேச அளவில் பங்கேற்க இயலாமல் மாணவி தவித்து வருகிறார்.

இந்தப் போட்டியில் பங்கேற்ற சர்வதேச அளவில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது பயண செலவு மற்றும் அங்கு  தங்கி விளையாட்டில் பங்கேற்க  ரூபாய் 40 ஆயிரம் வரை செலவாகும் தெரிவித்துள்ளனர்.

இந்த பணத்தை செலுத்த வழியில்லாமல் ஏழை மாணவி விக்னேஷ்வரி தவித்து வருகிறார். பொதுமக்கள் தன்னார்வலர்கள் ரோட்டரி போன்ற அமைப்பினர் யாரேனும் உதவி செய்தால் மாணவி விக்னேஷ்வரி சர்வதேச போட்டியில் பங்கேற்க நேபாளம் சென்று நிச்சயம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பார் என அவருக்கு  பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்புகின்றனர். மாணவிக்கு ஏதேனும் உதவி கிடைக்குமா. 8525910448 என்ற அவரது பெற்றோர் அலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

வீராங்கனையின் கடிதம்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT