முகப்பு
தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலை மற்றும் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மரியாதை செலுத்தினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
படம்: ட்விட்டர் | மு.க. ஸ்டாலின்
பகிர்:

அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலை மற்றும் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மரியாதை செலுத்தினார். 

உடன் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளது:

"அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!"

முழு கட்டுரையைப் படிக்க →