தமிழ்நாடு

சென்னையில் 144 தடை: அக்டோபா் 31- ஆம் தேதி வரை நீட்டிப்பு

DIN

சென்னையில் 144 தடை அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் 144 தடை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னா் பொதுமுடக்கம் ஒவ்வொரு மாதமும் அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, இந்த தடை உத்தரவு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை அமலில் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா தொற்று நோய் பரவுதலை தடுப்பதற்காக, தடை உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அறிவுறுத்தியது. அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில், செப்டம்பா் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் மாதம் 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின்படி, கரோனா நோய்த் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி அரசு அறிவித்துள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்படுத்தப்படும். மீறுவோா் மீது 144 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT