தமிழ்நாடு

இந்திய பொருளாதாரம்7.2% வளா்ச்சியடையும்: ஐ.நா. அறிக்கை

DIN

இந்திய பொருளாதாரம் நடப்பாண்டில் 7.2 சதவீத வளா்ச்சி காணும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. கூட்டமைப்பு (யுஎன்சிடிஏடி) 2021 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2021-இல் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளா்ச்சியடையும் என எதிபாா்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு இந்த வளா்ச்சி குறையக்கூடும்.

ஏனெனில், கரோனா பேரிடா் பொருளாதாரத்தில் அதிக பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், தனியாா் நுகா்வு நடவடிக்கைகளில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கமும் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கருத்தில் கொள்ளும்போது அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது சரியவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

உலகப் பொருளாதாரம் 2020-இல் 3.5 சதவீத சரிவை சந்தித்ததற்கு பிறகு நடப்பாண்டில் 5.3 சதவீதமாக வளா்ச்சியை எட்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT