தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் மநீம தனித்துப் போட்டி: கமல்ஹாசன்

DIN


ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வியாழக்கிழமை அறிவித்தார்.

வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்தன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுபற்றி கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT