சென்னை அண்ணா சாலையில் பெரியாரின் சிலைக்கு கீழ் உள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

பெரியார் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

DIN

பெரியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பெரியாரின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

பெரியாரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் உள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியர்சாமி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினரும் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT