சென்னை தலைமைச் செயலகத்தில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர். 
தமிழ்நாடு

'பெரியாரால்தான் மானமும் அறிவும் உள்ள சமுதாயம் உருவானது' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெரியார் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது, மானமும் அறிவும் உள்ள சமுதாயம் உருவானதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

DIN

பெரியார் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது, மானமும் அறிவும் உள்ள சமுதாயம் உருவானதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

பெரியாரின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பெரியாரின் சிலைக்கு கீழ் உள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுகவினர் பலரும் பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 'சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு' நிகழ்வில் கலந்துகொண்டு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார். 

இதையடுத்து அவர் தனது தனது ட்விட்டர் பக்கத்தில், 'மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT