தமிழ்நாடு

மன்னார்குடியில் பெரியார் பிறந்தநாள் விழா

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் அறிவித்தபடி சமூகநீதி நாள் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கங்களைச் சேர்ந்தவர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

மன்னார்குடி மேல ராஜவீதியில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். கட்சிக் கொடியினை நகரத் தலைவர் எஸ்.என். உத்திராபதி ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்எல்ஏ பி.ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜி.பாலு, தலைமை செயற்குழு உறுப்பினர் சு.ஞானசேகரன், நகரச் செயலர் வீரா.கணேசன், காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர்.கனகவேல், மதிமுக  மாவட்டச் செயலர்  பி.பாலச்சந்திரன், சிபிஎம் நகரச் செயலர் ஜி.ரெகுபதி, விடுதலைச் சிறுத்தைகள் மாநில நிர்வாகி ஆர்.ரமணி, த.க. இ .பெ.மன்ற கிளைத் தலைவர் செ.செல்வகுமார், தமுஎக சங்க கிளைச் செயலர் ஆர்.யேசுதாஸ், ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி அ.முரளி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் யு.எஸ்.பொன்முடி, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் ஆர்.பாரதி பூமிநாதன், தொமுச டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலர் பா.ரவிக்குமார், அண்ணா திராவிடர் கழக நகரச் செயலர் சரவணமூர்த்தி ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சமூகநீதி நாள் உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் அதிமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ்

முன்னதாக அதிமுக சார்பில் கட்சி மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சர், எம்எல்ஏவுமான ஆர்.காமராஜ் தலைமையில் கட்சியினர் மற்றும் சார்பு அணியினர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதில் நகர் மன்ற முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், அதிமுக நகரச் செயலர் ஆர்.ஜி.குமார், ஒன்றியச் செயலர்கள் கா.தமிழ்ச்செல்வம், தங்க தமிழ் கண்ணன், ஜெ.பேரவை மாவட்டச் செயலர் பொன்.வாசுகி ராம், நகர அவைத் தலைவர் த.வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT