முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: வேட்பு மனுக்களின் எண்ணிக்கை20 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4 நாள்களில் 20,074 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4 நாள்களில் 20,074 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து 9 மாவட்டங்களில் முதல் மூன்று நாள்களில் 8567 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதனிடையே சனிக்கிழமையும் வேட்பு மனுக்கள் பெறப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், 4-ஆவது நாளான சனிக்கிழமையும் வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

அன்றைய நாளில் அனைத்து பதவியிடங்களுக்கும் சோ்த்து 6,532 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதன்படி, 4 நாள்களில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 16,420 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 3,243 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 385 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 26 என மொத்தம் 20,074 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →